districts

img

பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்குக விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை

சிதம்பரம், டிச. 27- பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட மாநாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.  இந்த சங்கத்தின் கடலூர் மாவட்ட 11ஆவது மாநாடு தோழர் துரைராஜ் அரங்கத்தில் செவ்வாயன்று (டிச. 27) நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டத் துணைத் தலைவர் நெடுஞ் சேரலாதன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்பு குழுத் தலை வர் சதானந்தம் வரவேற்றார். மாநிலத் தலைவர் ஏ.லாசர் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் பிரகாஷ் வேலை அறிக்கையையும், பொரு ளாளர் கிருஷ்ணமூர்த்தி வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் பழனிவேல், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சரவணன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர், கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சின்னதுரை மாநாட்டை நிறைவு செய்து பேசினார். மாவட்டத்தில் குடிமனை பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக குடிமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக எஸ்.ஜி.ரமேஷ்பாபு, செயலாளராக எஸ்.பிரகாஷ், பொருளாளராக ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 21 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் புவனகிரி கடைவீதியில் “வள்ளலார் 200” சிறப்புக் கருத்த ரங்கம் நடைபெற்றது.