மயிலாடுதுறை , ஜன27- மயிலாடுதுறை மாவட்டத் தில் 73 ஆவது குடியரசு தின விழாவையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் தேசிய கொடியேற்றி கொண்டாடினர். ஒன்றிய அர சால் புறக்கணிக்கப்பட்ட தமிழ கத்தின் சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் படங்களை வைத்து வீர முழக்கங்களை எழுப்பினர். மயிலாடுதுறை மாவட்டக் குழு அலுவலகம் முன்பு கட்சி யின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தேசியக்கொடியி னை ஏற்றி வைத்தார். தரங்கம் பாடி ஒன்றியம் சார்பில் திருக்க டையூர் அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் ஏ.ரவிச் சந்திரன் ஏற்றி வைத்தார். குத்தா லம் ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் சி.விஜயகாந்த் பெரம்பூரில் ஏற்றி வைத்தார். செம்பனார்கோவில் ஒன்றியம் சார்பில் ஆக்கூர் அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ் ஏற்றி வைத்தார்.
வாலிபர் சங்கம் உறுதிமொழி ஏற்பு
ஒன்றிய மோடி அரசை கண்டித்து இந்திய குடியரசை பாதுகாக்கவும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் தரங்கம்பாடி வட்டம்,டி மணல்மேட்டில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எம்.ஐயப்பன் தலைமையில் நடை பெற்றது. மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.அமுல்காஸ்ட்ரோ, மாதர் சங்க ஒன்றியகுழு உறுப்பி னர் பி.குணசுந்தரி உள்ளிட் டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சிஐடியு சார்பில் உறுதிமொழி ஏற்பு
மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் குடியரசு தினத்தையொட்டி தேசி யக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து உறுதிமொழி ஏற்பும் தொழிற்சங்க கூட்டு இயக்கம் சார்பில் நடை பெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ரவீந்திரன், மாவட்டத்தலைவர் சீனி மணி உள் ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.