districts

img

தீக்கதிர் வாசகர் வட்ட ‘அரசியல் அறிவோம்’ பயிற்சி பட்டறை

பெரம்பலூர், மார்ச் 9 - பெரம்பலூர் மாவட்ட தீக்கதிர் வாசகர் வட்டத்தின் நான்காம் ஆண்டு தொடர் “அரசியல் அறிவோம்” வகுப்பு பிப்.22 முதல் மார்ச் 22 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் இந்த வார  அரசியல் வகுப்பு சனிக்கிழமை நடை பெற்றது. சமூக செயல்பாட்டாளர் டாக்டர் ஜெயலட்சுமி வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசி  தலைமை வகித்தார். எழுத்தாளர் இரா. எட்வின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி னார். நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி. சுகந்தி, “பெண் எனப்படுவது ஆணின் எதிர்  சமம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி னார். இறுதியாக பெரம்பலூர் மாவட்ட மக்களை தேடி மருத்துவ சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செல்வி நன்றி தெரி வித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட செயற் குழு டாக்டர் கருணாகரன், அகஸ்டின், ஏ.கே. ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பி னர்கள், இந்திய மாணவர் சங்க மாவட்டச்  செயலாளர் ராமகிருஷ்ணன், தி.க நிர்வாகி கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.