திருத்துறைப்பூண்டி, ஜூலை 27- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத் திற்கு உட்பட்ட மாமணி ஊராட்சி அத்திமடையில் தேசிங்கு ராஜபுரம், கொக்கராடி, பாமணி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 162 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மேலும், கலைஞர் நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருத்து றைப்பூண்டி நகரத்தில், தினசரி காய்கறி அங்காடி, சிறு உணவகம், தானியங்கி வங்கி, கழிவறை உள்ளிட்ட 44 கடை கள், காய்கறி அங்காடி கட்டும் பணி, மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் சார்பில் 2047 மின்சார பெருவிழா திட்டத்தினை யும் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் க.மாரி முத்து, நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.