districts

img

பதவி உயர்வை உடனே வழங்க வேண்டும் ஊரக வளர்ச்சி ஊழியர்கள் மாநாடு கோரிக்கை

திருவாரூர், டிச.21 - தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் சங்க திருவா ரூர் மாவட்ட 14 ஆவது மாநாடு சனிக் கிழமை நடைபெற்றது.

மாநிலத் தலைவர் எஸ்.ரமேஷ் சங்க கொடியை ஏற்றினார். மாநாட்டுக்கு மாவட்டத் தலை வர் என்.வசந்தன் தலைமை வகித் தார். மாநில செயற்குழு உறுப்பினர்  டி.ராஜசேகரன் வரவேற்றார்.  மாநிலச் செயலாளர் ஜ.ஜம்ருத் நிஷா துவக்கவுரையாற்றினார்.

மாவட்டச் செயலாளர் கே.எஸ்.செந்தில் வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் எஸ்.சிவக்குமார் நிதிநிலை அறிக்கை யும் முன்வைத்தனர். மாநிலத் தலை வர் எஸ்.ரமேஷ் நிறைவுரையாற்றி னார். மாவட்ட இணைச் செயலா ளர் டி.ஜெ.அமர்நாத் நன்றி கூறி னார். மாநாட்டில் 20 பேர் மாவட்ட  நிர்வாகிகளாக தேர்வு செய்யப் பட்டனர். மாவட்டத் தலைவ ராக என்.வசந்தன், செயலாளராக  கே.எஸ்.செந்தில், பொருளாளராக  எஸ்.சிவகுமார், மாநில செயற் குழு உறுப்பினராக டி.ராஜசேக ரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.  ஊராட்சி செயலர்களுக்கு தேர்வு  நிலை சிறப்பு நிலை ஊதிய பதிவேடு பராமரிக்க ஊதியம் வழங்க வேண்டும், பல ஆண்டு களாக நிலுவையிலுள்ள வட்டார  வளர்ச்சி அலுவலர்கள், உதவிப்  பொறியாளர்கள், பணி மேற்பார் வையாளர்கள் ஆகியோரின் பதவி  உயர்வை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.