குடவாசல், டிச.22 - கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழையால், அரசு தொகுப்பு வீடுகள் மிக வும் மோசமாக, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற நிலையில் இருக்கின்றன.
அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றி யம் கண்டிரமாணிக்கம் கிராமத்தில் உள்ள ஜீவா நகரில் வசிக்கும் மக்களின் தொகுப்பு வீடுகள், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கன மழையில் மிகவும் சேதமடைந்துள்ளன. வீட்டில் வசிப்பதற்கே அச்சமாக உள்ளது என கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் பாதிக்கப் பட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடவாசல் தெற்கு ஒன்றியச் செயலா ளர் டி.லெனின் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் எம்.கோபிநாத், கே.ஆறுமுகம், அந்தோணி எட்வர்ட்ராஜ் உள்ளிட் டோர் பாதிக்கப்பட்ட பகுதி களுக்கு நேரில் சென்று களஆய்வு செய்து, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த வடகிழக்கு பருவமழை யினால், ஜீவா நகரில் 15 தொகுப்பு வீடுகளின் மேற்கூரை சிமெண்ட் காரைகள் இடிந்து விழுந்து, எப்போது வேண்டுமானாலும் வீடு முற்றிலும் இடிந்து விழும் மோச மான நிலை உள்ளது. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வகையில் பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் நாரணமங்கலம் ஊராட்சி 2 ஆவது வார்டு காலனி தெருவைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது கணவர் காலமான நிலையில், தனது குழந்தையுடன் பழுதடைந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டின் சுவர்களுக்கு மத்தியில், வேறு வழியின்றி வசித்து வருகிறார். குடவாசல் ஒன்றி யம் முழுவதும் உள்ள தொகுப்பு வீடுகளின் நிலை இதுதான். எனவே பாதிப்படைந்த வீடுகளையும் சீர் செய்தும், முற்றிலும் பாதிப்படைந்த வீடுகளை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்டித் தரவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடவாசல் ஒன்றியச் செயலாளர் டி.லெனின் தெரிவித்தார்.