மன்னார்குடி, ஆக.24 - 14.6.2022 அன்று மன்னார்குடி கோட்டாட் சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையின்படி, 2வது வார்டு அம்பலகாரர் தெருவில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் குடும்பங்களுக்கு பட்டா வழங்கவில்லை. இதைக் கண்டித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சிபிஎம் நகரக் குழு சார்பில் நடை பெற்ற போராட்டத்திற்கு டி.ஜெகதீசன் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் போராட் டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முரு கையன், வி.ச. மாவட்டத் தலைவர் எஸ்.தம்பு சாமி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.சந்திரா, சிஐடியு இணைப்பு சங்க நிர்வாகிகள் போராட்டத்தை ஆதரித்து பேசினர். கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி சிறப்புரையாற்றினார். இரவு 8.30 மணி அளவில் வருவாய் கோட்டாட்சியர் அழைத்ததன் பேரில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில், சம்பந்தப்பட்ட கோப்பு களை உடனே மாவட்ட வருவாய் அலுவல ருக்கு அனுப்பி விடுவதாகவும், ஒரு மாதத்தில் பட்டா வழங்குவதற்குரிய நடவடிக் கைகளை மேற்கொள்வதென முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. அதன்பேரில் போராட் டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.