districts

கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் உறுதி: வாலிபர் சங்க போராட்டம் ஒத்திவைப்பு

நன்னிலம், மார்ச் 27 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம்  பூந்தோட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தின் சீர்கேட்டை கண்டித்தும், அகரதிருமாளம் ஊராட்சி மன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுவரை பொது மக்களின் அடிப்படை கோரிக்கைகளை கூட நிறைவேற்றாத ஊராட்சி  நிர்வாகத்தை கண்டித்தும், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான மரங்களை தனிநபருக் காக வெட்டிய நெடுஞ்சாலை துறை அதிகாரி களை கண்டித்தும் வாலிபர் சங்கத்தின் நன்னி லம் ஒன்றியம் சார்பில் கருப்புக் கொடியு டன் சாலை மறியல் நடைபெறும் என அறிவிக்கப் பட்டது. இதையடுத்து சனிக்கிழமை காலை பூந்தோட்டம் கடைவீதி முன்பாக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் செய்ய கூடினர். மறியல் நடைபெறும் இடத்திற்கு வந்த நன்னிலம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை, காவல் அதிகாரிகள் மறியலில் ஈடுபட முயன்ற வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.எம்.சலாவுதீன், மாவட்டச் செயலாளர் கே.பி.ஜோதிபாசு, சிபிஎம் நன்னிலம் ஒன்றிய செயலாளர் கே.எம்.லிங்கம், மாவட்ட குழு உறுப்பினர் டி.வீரபண்டியனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில், ஏப்ரல் 6 ஆம் தேதிக்குள் தங்களின் அனைத்து கோரிக்கை களையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை  எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக் கப்பட்டது. பின்னர் கோரிக்கைகளை முழக்க மிட்டு போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.