திருவாரூர், டிச.24 - திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் சார்பில் பருத்தி சாகுபடி குறித்து விவசாயிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தொழில் முதலீட்டு ஊக்கு விப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ.பால சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், தொழில் முதலீட்டு ஊக்கு விப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அதே வேளையில், ஒவ்வொரு முறையும் விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், தொழில் முதலீட்டாளர்கள் வருகையின்போது விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையிலும், அவர்களின் வருமா னத்தை அதிகரிக்கும் வகையிலும் பல்வேறு புதிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற் கொண்டு வருகிறார் முதலமைச்சர்.
விவசாயி களுக்கு பருத்தி சாகுபடி குறித்த வழிகாட்டு முறைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பருத்தி நல்ல முறையில் விளைச்சல் ஏற்பட்டு, விவசாயிகள் பயன்பெறுவர். இம்முயற்சி வெற்றி பெறும்” என்றார். நிகழ்வில் வேளாண்மை இணை இயக்கு நர் தி.பாலசரஸ்வதி, வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) மு.லெட்சுமிகாந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.