districts

போதை கலாச்சாரத்திலிருந்து இளைஞர்களை பாதுகாத்திடுக! வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தல்

திருவாரூர், ஜூன் 27 - இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் திருவாரூர் ஒன்றிய 18 வது மாநாடு கூடூ ரில் முத்துவள்ளி திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் கே.பி. ஜோதிபாசு, எஸ்.எம்.சலா வுதீன், ஆர்.எஸ்.சுந்தரய்யா, கே.வேலவன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசி னர்.  திருவாரூர் ஒன்றியத் துக்கு உட்பட்ட அனைத்து கிராமப்புற சாலைகளையும் சீர் செய்ய வேண்டும். மாவட்ட தலைநகரான திரு வாரூரில் தொழிற்கல்வி பயில் வதற்கான கல்லூரி அமைக்க வேண்டும். எஸ்.வி.எஸ் பள்ளியில் நீக்கப்பட்டுள்ள வரலாறு பாடப்பிரிவினை நடப்பு கல்வியாண்டில் மீண்டும் கொண்டு வர வேண்டும். போதை கலாச் சாரத்திலிருந்து இளைஞர் களை மீட்டெடுக்க வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன. ஜூலை 1 அன்று ஒன்றிய அரசின் அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற உள்ள  ஆர்ப்பாட்டத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களை திரட்டுவது  எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.  மாநாட்டில் தலைவராக கே.சதீஷ், செயலாளராக ஜெ.வானதீபன், பொரு ளாளராக முருகானந்தம், துணைச் செயலாளராக கோ கிலா, துணைத் தலைவராக கலையரசன் உள்பட 14 பேர் கொண்ட ஒன்றியக் குழு  தேர்வு செய்யப்பட்டது.