திருவாரூர், ஜூலை 15 - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ். குமாரி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அது தொடர்பாக எடுக்கப் பட்ட நடவடிக்கைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் ஒழிப்பு விழிப்பு ணர்வு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்குப் பிறகு பேசிய தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர், திருவா ரூர் மாவட்டத்தில் பெண்கள் மீதான வன்முறை தொடர்பாக 294 புகார் மனுக்கள் பெறப்பட்டு 234 மனுக்களுக்கு தீர்வு காணப் பட்டுள்ளது. நிலுவையிலுள்ள 60 மனுக்கள் விரைவில் முடிக்கப்படும். குழந்தை திரும ணங்கள், பெண்களுக்கு எதிரான வர தட்சணை கொடுமை, பணிபுரியும் இடங்க ளில் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்ச னைகள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 10 பெண்க ளுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்களில், அவர்கள் புகார்களை தெரிவிக்க புகார் சங்கம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என தெரி வித்தார்.