திருவாரூர்,டிச.8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளராக டி.முருகையன் தேர்வு செய்யப்பட்டார்.
கட்சியின் திருவாரூர் மாவட்ட 24-ஆவது மாநாடு நன்னிலம் ஒன்றியம், கொல்லுமாங்குடி தோழர் கள் என்.சங்கரய்யா, சீதாராம் யெச்சூரி நினைவு அரங்கத்தில் டிசம்பர் 6,7,8 ஆகிய தினங்களில் நடை பெற்றது.
மாநாட்டுக்கு டி.முருகை யன், கே.தமிழ்மணி, ஆர்.சுமதி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநிலச் செயற் குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி வேலை அறிக்கையையும் எம்.சேகர் வரவு, செலவு அறிக்கையையும் சமர்ப்பித் தனர்.
மாநிலக்குழு உறுப்பினர் சாமி.நடராஜன் வாழ்த்துரை வழங்கினார். மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் நிறைவுரையாற்றினார்.
புதிய மாவட்டக்குழு தேர்வு
மாநாட்டில் 41 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக டி. முருகையன் தேர்வு செய்யப் பட்டார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக ஐ.வி.நாகராஜன், ஜி.சுந்தர மூர்த்தி, எம்.சேகர், பி.கந்த சாமி, சி.ஜோதிபாசு, கே.என். முருகனந்தம், கே.தமிழ் மணி, கே.ஜி.ரகுராமன், டி. வீரபாண்டியன், பா.கோமதி, கே.பி.ஜோதிபாசு,என்.இராதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.