districts

img

செந்தொண்டர் அணிவகுப்புடன் தொடங்கிய சிபிஎம் திருவாரூர் மாவட்ட 24 ஆவது மாநாடு

திருவாரூர், டிச.6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட 24 ஆவது மாநாடு நன்னிலம் ஒன்றியம், கொல்லுமாங்குடி தோழர்கள் என்.சங்கரய்யா, சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கில் டிச.6,7,8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

மாவட்ட மாநாட்டின் தொடக்கமாக டிச.6 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை பேரளம் ரயில்வே கேட்டில் இருந்து தியாகிகள் ஜெ.நாவலன் மற்றும் எம்.கண்மணி ஆகியோரின் நினைவு ஜோதியுடன் புறப்பட்ட செந்தொண்டர் அணிவகுப்பு பேரணியை மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் துவக்கி வைத்தார்.

 பேரணி, பேரளம் கடைவீதி வழியாக, கொல்லுமாங்குடி கடைவீதி அருகே அமைக்கப்பட்ட பொதுக் கூட்ட மேடை அருகே வந்து நிறைவடைந்தது. பின்னர் நடைபெற்ற மாநாட்டு பொதுக் கூட்டத்திற்கு வரவேற்புக் குழு செயலாளர் தியாகு.ரஜினிகாந்த் தலைமை வகித்தார். வரவேற்பு குழு தலைவர் ஜெ.முகமது உதுமான் வரவேற்றார்.

சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநிலக் குழு உறுப்பினர்கள் சாமி.நடராஜன், ஐ.வி.நாகராஜன் மற்றும் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர். பேரளம் நகரச் செயலாளர் ஜி.செல்வம் நன்றி கூறினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகரக் குழு உறுப்பினர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.