திருவாரூர், டிச.7 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட 24 ஆவது மாநாடு நன்னிலம் ஒன்றியம், கொல்லுமாங்குடி யில் தோழர்கள் என்.சங்கரய்யா, சீத்தா ராம் யெச்சூரி நினைவரங்கத்தில் டிசம்பர் 6,7,8 ஆகிய தினங்களில் நடை பெறுகிறது.
நினைவுக் கொடி, சுடர்
இரண்டாம் நாளான சனிக் கிழமை, தியாகி ஜெ.நாவலன் நினை வாக திருமீயச்சூரிலிருந்து, தியாகி கண்மணி நினைவாக கொரடாச்சேரியி லிருந்து நினைவுச் சுடர் கொண்டு வரப்பட்டது. இதனை தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து தோழர் பி.என்.தங்க ராசு நினைவாக திருத்துறைப்பூண்டி யிலிருந்து கொடி, தோழர் ஆர்.குமார ராஜா நினைவாக கோட்டூரிலிருந்து கொண்டு வரப்பட்ட கொடி கயிறு, தோழர் எஸ்.ரெங்கசாமி நினைவாக திருக்கொட்டாரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கொடி மரம் என தோ ழர்கள் பெயரால் கொண்ட வரப்பட்ட மாநாட்டு செங்கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.கலிய பெருமாள் ஏற்றினார்.
மாநாட்டு தலைமைக் குழு உறுப்பி னர்கள் டி.முருகையன், கே.தமிழ்மணி, ஆர்.சுமதி ஆகியோர் தலைமை வகித்தனர். கே.ஜி.ரகுராமன் அஞ்சலி உரையை வாசித்தார். வரவேற்பு குழு தலைவர் ஜெ.முகமது உதுமான் வர வேற்றார். மாநிலச் செயற்குழு உறுப்பி னர் மதுக்கூர் ராமலிங்கம் துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி வேலை அறிக்கையை வாசித்தார். எம்.சேகர் வரவு, செலவு அறிக்கையை முன்வைத்தார்.
தொடர்ந்து மாநாட்டில், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் எழுதிய “உள்ளத்தில் உண்மை... வாக்கினிலே இனிமை” என்ற புத்த கம் வெளியிடப்பட்டது. புத்தகத்தை மத்தியக் குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பி னர் மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் சாமி.நட ராஜன் ஆகியோர் வழங்க, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் பா.ஆனந்த், செயலாளர் பா.சுக தேவ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.எஸ்.ஜெய்கிஷ், செயலாளர் ஏ.கே. வேலவன் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சௌந்தர ராஜன், செயலாளர் முனைவர் ஜீ.வெங்கடேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
டிச.8 (ஞாயிறு) அன்று மாநாடு நிறைவுபெறுகிறது.