திருவாரூர், டிச.24 - மழை-வெள்ளச் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி கடைவீதி யில் புதனன்று சாலை மறியல் நடை பெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடந்த போராட்டத்திற்கு கட்சி யின் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் தியாகு.ரஜினிகாந்த் தலைமை வகித் தார். பேரளம் நகரச் செயலாளர் ஜி.செல்வம் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி.முருகையன் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. வீரபாண்டியன், மாவட்ட குழு உறுப்பி னர்கள் ஜெ.முகமதுஉதுமான், விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செய லாளர் எம்.ராமமூர்த்தி, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செய லாளர் சரவண.சதீஷ்குமார் மற்றும் கட்சியின் ஒன்றிய, நகர குழு உறுப்பி னர்கள் பங்கேற்றனர்.
தொடர் கனமழையால், நன்னிலம் ஒன்றியத்தின் பல பகுதிகளில், ஆறு களில் கரை உடைப்பு ஏற்பட்டு, நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந் துள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட கடைமடை பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மழை வெள்ளத் தில் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.30000 வழங்க வேண்டும்.
கோயில் நில குத்தகை சாகுபடி தாரர்களுக்கு இந்த ஆண்டிற்கான குத்த கையில் விலக்கு அளிக்க வேண்டும். உடைப்பு ஏற்பட்ட ஆற்றங்கரை களை பலப்படுத்த வேண்டும். கூத்த னூர், கீரனூர், வாளூர், கூரத்தாழ்வார் குடி, காளியாக்குடி, சிறுபுலியூர், கதிரா மங்கலம், கோவில்பத்து, முகந்தனூர், திருக்கொட்டாரம் உள்ளிட்ட அனைத்து பாசன, வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டு மோசமான நிலையில் உள்ள காலனி தொகுப்பு வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் தர வேண்டும். கால்நடைகள் பாதிப்புகளை கணக் கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஆற்றின் கரைகளை பலப் படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கொல்லுமாங்குடி - காரைக்கால் - மயிலாடுதுறை- கும்ப கோணம் சாலையில் மறியல் போராட் டம் நடைபெற்றது.
சம்பவ இடத்திற்கு வந்த நன்னிலம் துணை வட்டாட்சியர் கருணாமூர்த்தி மற்றும் காவல்துறையினர் சிபிஎம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், “கனமழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இரண்டு நாட்களில் நிவாரணம் வழங்குவதாக வும், பயிர் பாதிப்புகளை கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சி யருக்கு பரிந்துரை செய்வதாகவும், இடி யாறு உடைப்பை சீரமைக்க நடவடிக் கையை மேற்கொள்வதாக” உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து சாலை மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது.