திருவாரூர், ஜூலை 4 - அக்னி பாதை என்ற பெயரில் ராணு வத்தில் ஒப்பந்த முறையைப் புகுத்தும் ஒன்றிய அரசின் திட்டத்தை கண்டித்து இடதுசாரி மாணவர் - வாலிபர் அமைப் புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் திருவாரூர் தலைமை தபால் நிலை யம் முன்பு திங்கள் கிழமை நடை பெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எஸ்.எம். சலாவுதீன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் நிர்வாகி பாலசுப்பிர மணியன் ஆகியோர் தலைமை வகித்த னர். வாலிபர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் கே.பி.ஜோதிபாசு, மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஹரி சுர்ஜித், ஏஐஎஸ்எஃப் சார்பில் செ.செல் வேந்திரன், ஏஐஒய்ஏ சார்பில் எம்.நல்ல சுகம் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். அக்னி பாதை திட்டத்தின் மூலம் தேசப் பற்றோடு நாட்டுக்காக சேவை செய்யத் துடிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதோடு, எதிர் காலத்தில் ராணுவத்திலும் தனியாரை நுழைக்கும் இந்த முயற்சியை இடது சாரி மாணவர்-இளைஞர் அமைப்பு கள் வன்மையாகக் கண்டிக்கிறது. ஒன்றிய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது