திருவாரூர், ஏப்.30 - கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை இருந்ததால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயில் திருவிழாக்கள் எதுவும் நடைபெற வில்லை. தற்போது தடை விலக்கப்பட்டிருக் கும் நிலையில், பரவலாக திருவிழாக்கள் நடை பெற்று வருகின்றன. ஆனால் திருவிழாக் களில் ஏற்படும் விபத்துகளால் பக்தர்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகம் நிகழ் கின்றன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் நல்லமாங்குடி கிராமத் தில் உள்ள மாரியம்மன் கோவிலில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற தீமிதி திருவிழாவின் போது அப்பகுதியை சேர்ந்த ரமேஷ், சக்தி விநாயகம் என்கிற இரண்டு நபர்கள் எதிர்பா ராத விதமாக தீக்குழியில் தவறி விழுந்த னர். சம்பவ இடத்திலிருந்தோர் உடனடி யாக அவர்களை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை வழங்கி, மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரையும் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, மருத்துவர்களிடம் சிகிச்சை தொ டர்பாக கேட்டறிந்தார்.