districts

100 நாட்கள் வேலை வழங்க வேண்டும்! விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

திருவாரூர், டிச.26-  திருவாரூர் மாவட்டம் குடவாசல் வடக்கு ஒன்றியத்  தின் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 19-ஆவது ஒன் றிய மாநாடு எண்ணகுடியில்  உள்ள மறைந்த தோழர் முரு கையன் நினைவு அரங்கத் தில் நடைபெற்றது.  மாநாட்டிற்கு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கே. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.மணியன் நிறைவுரையாற்றினார். சிபிஎம் மாவட்டக் குழு  உறுப்பினர் டி.வீரபாண்டி யன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் வி. ராஜதுரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மாநாட்டில், செயலாள ராக பி.சந்திரஹாசன், தலை வராக எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் உட்பட 9-பேர்  கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது.  அனைத்து ஊராட்சி களும் நூறு நாள் வேலை யை 100 நாட்கள் வழங்க வேண்டும், ஊராட்சி பகுதி யில் தற்போது பெய்த மழை யால் சேதமடைந்து உள்ள சாலைகளை உடனே சீர்  செய்ய வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.