பெரம்பலூர், டிச.31- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க பெரம்பலூர் மாவட்ட 3-ஆவது மாநாடு வெள்ளியன்று வேப்பந்தட்டையில் நடை பெற்றது. விதொச மாவட்ட தலைவர் அ.முருகே சன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆர்.கோகுலகிருஷ்ணன் வரவேற்றார். மாநிலச் செயலாளர்கள் அ.பழனிசாமி, கே. பக்கிரிசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ் டின், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என்.செல்லதுரை, மாவட்டச் செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், விதொச மாநிலக்குழு உறுப்பினர் பி.ரமேஷ், மாவட்ட செயலா ளர் அ.கலையரசி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விதொச மாவட்ட துணைச்செய லாளர் எஸ்.ஜெய்சங்கர், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.எம்.சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன முட்லு அணையை உடனே துவங்க வேண்டும், முறைகேடுகளை களைந்து தாலிக்கு தங்கம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும், விதவை, முதியோர் ஆதரவற்றோர்களுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.