திருவண்ணாமலை, ஆக. 10- திருவண்ணாமலை மாவட்டம் வந்த வாசி வட்டம் எஸ்.மோட்டூர் ஊராட்சி யில் மூன்று தலைமுறைகளாக பழங்குடி இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். வீட்டு மனைப்பட்டா, மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுவதுடன், விஷ பூச்சி களால் அவ்வப்போது ஆபத்தும் ஏற்படு கிறது. எனவே, பழங்குடியின மக்க ளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பட்டா வழங்க வேண்டும், மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று, கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.தேவராஜ் தலைமை யில் பழங்குடியின மக்கள் வட்டாட்சி யர் அகத்தீஸ்வரரிடம் மனு அளித்த னர். மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன், வட்டக் குழு செயலாளர் அ.அப்துல் காதர், வழக்கறிஞர் சுகுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.