திருவண்ணாமலை, ஏப். 8- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அதியனூர் ஊராட்சி யில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் அதியங்குப்பம் கிராமத்தின் அருகில் பழங்குடியின மக்கள் வசித்து வந்தனர். ஊருக்கு அருகில் எப்படி குடியிருக்க லாம் என ஆதிக்க சக்தியினர் சிலர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர், அதியங்குப்பம் புன்னை சாலையில் பிள்ளையார் கோயில் அருகில் குடியேறினர். அந்த இடத்தில் பழங்குடியின குடும்பத்தினருக்கு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. அதையும் பொறுக்க முடியாத ஆதிக்க சக்திகள் அவர்களை அங்கிருந்தும் விரட்டினர். அதன்பிறகு அதியங்குப்பம் சிற்றூருக்கு அருகிலுள்ள குச்சிக்காடு பகுதியில் 30 ஆண்டுகளாக பழங்குடி யின மக்கள் வசித்து வருகின்றனர். ஆனாலும், நீர்ப்பிடிப்புப் பகுதி யில் குடிசைபோட்டுள்ளதாக கூறி அங்கிருந்தும் அகற்ற மாவட்ட நிர்வாகம் முயற்சிக்கிறது. இந்த தகவலை அறிந்த தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தின. இதை யடுத்து பழங்குடியின மக்கள் தங்கு வதற்கு வேறு இடம் ஒதுக்கப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டனர். அந்த இடத்தில் அடிப்படை வசதி கள் விரைவில் செய்து தரப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் உறுதிய ளிக்கப்பட்டது. ஆனால், 4 மாதங்க ளாகியும் மாவட்ட நிர்வாகத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வில்லை. இதனால் இருளில் தவித்து வருகின்றனர். மேலும் வந்தவாசி, புன்னை, நெல்லியாங்குளம் அரசுப் பள்ளிகளில் பொதுத் தேர்வை எதிர்கொண்டு படிக்கும் பழங்குடியின குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் மின்சார வசதியில்லாமல் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் பாடம் படிக்கும் அவல ஏற்பட்டுள்ளது. பழங்குடியின மாணவர்களின் கல்விக் கனவை கருத்தில் கொண்டு, விரைவாக இந்தப் பகுதிக்கு மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.