districts

img

திருவண்ணாமலை வல்லுநர் குழு ஆய்வு

திருவண்ணாமலை, டிச.8- திருவண்ணாமலையில் கனமழை காரணமாக  மலையில் ஏற்பட்ட மண்சரிவு குறித்து ஆய்வு செய்ய வருகை புரிந்த புவியியல் மற்றும் சுரங்கத்துறை வல்லுநர் குழுவுடன் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்  ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்க ளிடம் கூறுகையில் தீப மலையில் ஏற்பட்ட மண்சரிவு குறித்து ஆய்வு செய்ய வருகை தந்துள்ள வல்லுநர்கள் குழு தீபமலை மீது ஏறி மண் மற்றும் பாறையின் தன்மை குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். இக்குழு வில் மண் இயக்கவியல் அடித்தள பொறியியல்  துறை, சுரங்கத்துறை, இந்திய புவியியல் ஆராய்ச்சித்துறை, உள்ளிட்ட துறைசார்ந்த நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர். திரு வண்ணாமலை தீபமலை யின் மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்து நிபுணர்களின் ஆய்வு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிப்பார்கள்.

அதன் அடிப்படையில், தீபதிருநாளன்று பக்தர்களை மலை மீது ஏற அனுமதிப்பது குறித்து அரசின் சார்பாக முடிவு செய்து தெரிவிக்கப்படும் என்றார்.

முன்னதாக ஆய்வில் மாவட்ட வருவாய் அலு வலர்  இரா.இராம்பிரதீபன், மண்டல இணை இயக்கு நர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை  ஆறுமுக நயினார், உதவி இயக்கு நர்கள், புவியியல் மற்றும் சுரங்கத்துறை  லட்சுமி ராம் பிரசாத் (திரு வண்ணாமலை),  சுந்தர ராமன் (திண்டுக்கல்), சென்னை அண்ணா பல்கலைகழக மண் இயக்கவியல் அடித்தள பொறியியல்துறை, பேரா சிரியை பிரேமலதா, திருவண்ணாமலை வட்டாட்சியர், உதவி புவியியலாளர்கள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.