திருவண்ணாமலை,மே 4- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவல கத்தில் மாற்றுத் திறனாளி கள் குடியேறும் போராட்டத் தில் ஈடுபட்டனர். அடையாள சான்று, உதவித் தொகை, 100 நாள் வேலை வழங்க வேண்டும், ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் தலை மையில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டத்தையும் வரு வாய் கோட்டாட்சியர் தலை மையில் நடத்தப்படும் மாதாந்திர குறைதீர்ப்பு கூட்டத்தையும் உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. மாநில பொதுச் செய லாளர் எஸ்.நம்புராஜன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சி.ரமேஷ் பாபு, செயலாளர் சி.ஏ.செல்வம், பொருளாளர் சி.சத்யா, செங்கம் ஒன்றியத் தலைவர் ஆறுமுகம், புதுப் பாளையம் ஒன்றியத் தலை வர் காந்தி, நிர்வாகிகள் எம்.எஸ்.சங்கர் அமுதா சங்கர், அண்ணாமலை, நவாப்ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்க ளுடன் பேச்சு வார்த்தை நடத்தி எழுத்துபூர்வமாக வாக்குறுதி அளித்தார். அதனடிப்படையில் தற்காலிகமாக போராட்டம் முடிவுக்கு வந்தது.