திருவண்ணாமலை மலையடிவாரம் வ.உ.சி நகரில் மண் சரிவு ஏற்பட்டு உயிரிழந்த 7 நபர்களின் குடும்பத்திற்கும் தலா ரூ. 5 லட்சத்திற்கான நிவாரண தொகையை, உயிரிழந்தவர்களின் வாரிசுகளிடம் அமைச்சர் எ.வ.வேலு வியாழனன்று (டிச.5) வழங்கினார். சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், மேயர் நிர்மலா வேல்மாறன், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் உடனிருந்தனர்.