districts

img

திருவண்ணாமலையில் புயல்-மழை பாதிப்புகள்: சட்டமன்ற சிபிஎம் தலைவர் நாகை மாலி ஆய்வு

திருவண்ணாமலை, டிச.7- திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிபிஎம் சட்ட மன்ற உறுப்பினர் நாகை மாலி சனிக்கிழமையன்று (டிச.7) ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலைக்கு வருகை தந்த அவர், மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மண் சரிவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, மலையடிவார குடியிருப்புகளுக்கு பாது காப்பாக, தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சட்ட மன்ற உறுப்பினரிடம் மனு அளித்தனர். 

வாழவச்சனூர்

தொடர்ந்து, தண்ட ராம்பட்டு தாலுகா தென்பெண்ணை ஆற்றில், அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானூர் கிராமங்க ளுக்கு இடையிலான மேம்பாலம் கட்டி முடிக்கப் பட்டு 3 மாதங்களில்  மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பகுதியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  

பின்னர் தென்  பெண்ணை ஆற்றின் கரை யோரத்தில் வீடு கட்டி குடி யிருந்த மக்கள் வீடு இழந்து தவித்து வருவது குறித்து வாழவச்சனூர் கிராமத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.  

துரிதமாக  செயல்பட்ட அரசு

ஆய்வுப் பணி களை தொடர்ந்து செய்தியா ளர்களை சந்தித்த நாகை மாலி,  திருவண்ணாமலை மலையில் மண்சரிவு ஏற்பட்டு நான்கு குடும்பங்களை சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்த கொடூர நிகழ்வு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மண் சரிவு ஏற்பட்டது தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், மாவட்ட அமைச்சர், துணை முதல்வர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, மண்சரிவு மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.

வசிப்பதற்கு வேறு இடமில்லாமல், மலை அடிவாரத்தில் ஆபத்தான இடத்தில் ஏழை, எளிய மக்கள் வசித்து வருகின்றனர். திருவண்ணாமலை மலையை சுற்றி 18 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  அவர்களுக்கு தமிழக அரசு, மாற்று இடத்தில் வீடு கட்டி தர வேண்டும். பாது காப்பான இடங்களில் அங்குள்ள மக்களை மீள் குடியமர்த்த வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

 தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த  பாலம், 3 மாதத்தில்  மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உள்ள நிகழ்வு, ஏற்றுக்கொள்ள முடி யாது. அந்த பாலத்தின் கட்டு மானம் குறித்து உரிய ஆய்வு நடத்த வேண்டும், மீண்டும்  அங்கு உறுதியான பாலம் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், மாவட்டச் செயலாளர் ப.செல்வன், மாநகர செயலாளர் எம்.பிரகலநாதன், செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், இரா.பாரி, எஸ்.ராமதாஸ், எ.லட்சுமணன், வழக்கறிஞர் எஸ்.அபிராமன், மாவட்ட குழு உறுப்பினர் ச.குமரன், ஆர்.அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.