திருவண்ணாமலை,மே 24- திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியம் தாடிநொளம்பை கிராமத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் கிளை அமைப்புக்கூட்டம் நடைபெற்றது. பெரண மல்லூர் சேகரன் விளக்கிப் பேசினார். நிறுத்தப்பட்ட நகரப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி ஜூன் 15ஆம் தேதி வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.கிளைத் தலைவராக சு.புருஷோத்தமன், செய லாளராக கி. பெருமாள், பொருளாளராக ஜா.ஏழு மலை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.