districts

img

திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் வசிப்போருக்கு மாற்று இடத்தில் வீடு வழங்கிடுக! சிபிஎம் கோரிக்கை

திருவண்ணாமலை, டிச.3- திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி அங்கு அவர்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக திரு வண்ணாமலை மலை அடிவாரத்தில்  வீடில்லாத ஏழை, எளிய மக்கள் பலர் வீடு கட்டி வசித்து வருகின்ற னர். இந்நிலையில், திருவண்ணா மலை மலையில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வேண்டும் என்று ஒரு வழக்கும், திரு வண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆக்கிரமிக்கப்பட்ட குளங்களை கண்டறிந்து மீட்க வேண்டும் என்று  மற்றொரு வழக்கும் சென்னை  உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்டது. 

மண்சரிவில் 7 பேர் பலி

இந்த இரண்டு வழக்குகளையும் விசாரித்த நீதிமன்றம் இதற்கென ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழு கடந்த சில மாதங்களாக திருவண்ணா மலையில் கள ஆய்வு செய்துவரு கிறது.

இந்நிலையில், புயல் காரணமாக சனிக்கிழமை (நவ. 30) காலை 7 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) இரவு வரை இடைவிடா மல் தொடர் மழை பெய்து கொண்டே இருந்தது. இதில், ஞாயிற்றுக் கிழமை மாலை சுமார் 6 மணிக்கு திடீ ரென திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலையை ஒட்டியுள்ள வ.உ.சி.நகர், 11 ஆவது தெருவில் மண் சரிவு ஏற்பட்டது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தை கள் உள்பட 7 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.

பாறாங்கல் விழுந்து  ஜேசிபி, ஹிட்டாச்சி போன்ற எந்த வாகனங் களும் செல்ல முடியாத அளவுக்கு மலை உச்சியில் இருந்தது.  தொட ர்ந்து நடைபெற்ற மீட்புப்பணியின் போது 5 சடலங்களும், செவ்வா யன்று 2 சடலமும்   மீட்கப்பட்டன.

சிபிஎம் தலைவர்கள் ஆறுதல்

மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.செல்வன், மாநிலக் குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், மாநகர செயலாளர் எம்.பிரகல நாதன், மாவட்டக்குழு உறுப்பினர் ச. குமரன் உள்ளிட்டோர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்டச் செயலாளர் ப.செல்வன், திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்க ளுக்கு, துணை முதல்வர் உறுதி யளித்ததை போல், போர்க்கால அடிப்படையில் மாற்று இடம் வழங்கி அங்கு அவர்களுக்கு குடியிருப்பு களை கட்டித்தர வேண்டும். உயிரி ழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

முதல்வர் ஆறுதல்-நிதி உதவி

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை யில், “ ராஜ்குமார் என்பவரின் வீட்டின் மீது மரம் விழுந்ததை அறிந்து அவர் வீட்டின் கதவை திறக்க முற்பட்ட போது மலையிலிருந்து பெரிய பாறை உருண்டு வந்து வீட்டின் மேல்  விழுந்ததில் அவரது வீடு மண் மற்றும் பாறைகளால் மூடப்பட்டு இடிந்துள்ளது. இதனையறிந்த மாவட்ட நிர்வாகத்தினரால் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்படை யின் கமாண்டர் உட்பட 39 வீரர்கள் இரவு முதல் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முயற்சிகள்  பலனளிக்காமல் துரதிருஷ்டவசமாக அந்த வீட்டின் உள்ளே இருந்த ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி  மீனா (27), மகன் கவுதம் (9), மகள் இனியா (5), பக்கத்து வீட்டில் வசித்து வரும் சரவணன் என்பவரின் மகள் ரம்யா (7) மஞ்சுநாதன் என்பவரின் மகள் வினோதினி (14) மற்றும் சுரேஷ் என்பவரின் மகள் மகா  (7) ஆகிய ஏழு நபர்கள் மண்ணுக்கடி யில் சிக்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

இவ் விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு எனது  ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலை யும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் முத லமைச்சரின் பொது நிவாரண நிதி யிலிருந்து வழங்கிடவும் உத்தர விட்டுள்ளேன்” எனதெரிவித்துள்ளார்.

ஐஐடி குழு ஆய்வு!

திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த பகுதிகளில் சென்னை ஐஐடியை சேர்ந்த மண் பரிசோதனை நிபுணர்கள் நரசிம்மராவ் மோகன், பூமிநாதன் ஆகாஷ் உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர் களின் அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.