districts

img

வீட்டு மனை வழங்ககோரி மனு கொடுக்கும் இயக்கம்

திருவண்ணாமலை, டிச. 17-  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டத்தில் நீண்ட காலமாக அரசு புறம்போக்கில் வீடு கட்டி வசித்து வருபவர்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்கக் கோரியும், சொந்தமாக வீடு மனை இல்லாத நபர்களுக்கு வீட்டுமனை வழங்க கோரியும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.  

ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.  கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.கே.வெங்கடேசன், தலைவர் பி.கணபதி, எம். பிரகலநாதன்,  தலைவர் ஆர். அண்ணாமலை, சிஐடியு ஆர். ரவி, சிபிஎம் தாலுகா செயலாளர் சக்திவேல், குபேந்திரன், மாற்றுத்திறனாளிகள் சங்க சாரவல்லி, பிரகாஷ், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கோபிநாத் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.