திருவண்ணாமலை, டிச.8- திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த குன்னத்தூர் பைபாஸ் சாலையில் புதியதாக கட்டப்பட்டள்ள சிபிஎம் அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது.
திறப்பு விழாவிற்கு வட்டக்குழு செய லாளர் இர. இரவிதாசன் தலைமை தாங்கினார். மாநிலகுழு உறுப்பினர் எம். சிவக்குமார் செங்கொடி ஏற்றி அலு வலகத்தை திறந்து வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அ. உதயகுமார் வரவேற்றார். போளூர் நகர கிளை செயலாளர் ப. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் ப. செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், லட்சுமணன், மாநில குழு உறுப்பினர் எம். சிவக்குமார், பாரி (சிஐடியு), வழக்கறிஞர். நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.