திருவண்ணாமலை, பிப்.7- திருவண்ணாமலை காந்தி நகர் புறவழிச் சாலை யில் தேன் பழனி சமுதாயக் கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சோ.ஆறுமுகம் கல்லூரியை திறந்து வைத்தார். இயக்குநர் டாக்டர் டி.செந்தில்நாதன், கல்லூரி நிர்வாகிகள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். முன்னதாக, திருவண் ணாமலை காந்திநகர் புற வழிச் சாலையில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தின் மண்டல கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் கள் ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் துணைவேந்தர் சோ.ஆறுமுகம் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மைய ஒருங்கிணைப் பாளர்கள் கலந்து கொண்ட னர். தொடர்பு அலுவலர் ரவி நன்றி கூறினார்.