திருவண்ணாமலை, டிச. 4 - பெஞ்சால் புயல் மழையின் போது நிலச்சரிவு ஏற்பட்டு உயிரி ழந்த 7 பேரின் உடல்களும் புத னன்று ஒன்றாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப் பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் திருவண்ணாமலை மக்கள் பெருந் திரளாக பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலையில் கனமழை பெய்தது.
இதில், திருவண்ணா மலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் சுமார் 2,668 அடி உயர மலையில் இருந்து பாறை ஒன்று உருண்டு, மலை அடி வாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் 11-வது தெருவில் உள்ள வீட்டின் மீது விழுந்தது. கூடவே மண் சரிவும் ஏற்பட்டதால், அந்த வீடே முழுமை யாக மண்ணில் புதைந்தது. வீட்டில் கணவன், மனைவி, அவர்களின் குழந்தைகள் 2 பேர் மற்றும் கணவனின் அண்ணன் குழந்தைகள் 3 பேர் என்று மொத்தம் 7 பேர் இருந்த நிலை யில், அவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மண் சரிவில் புதைந்தனர்.
திருவண்ணாமலை நகர காவல்துறையினர் மற்றும் தீய ணைப்பு துறையினர் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர். எனி னும், 48 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, கூலித் தொழிலாளி ராஜ்குமார் (32), அவரது மனைவி மீனா (27), தம்பதியின் மகன் கவுதம் (9), மகள் இனியா (7), இதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரவணன் மகள் ரம்யா (7), இதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மஞ்சுநாதன் மகள் வினோதினி (14), கூலித் தொழிலாளி சுரேஷ் மகள் மகா (12) ஆகிய 7 பேர் உயிரற்ற நிலை யில் மீட்கப்பட்டனர்.
பாறை விழுந்த தில் அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் உருக்கு லைந்து இருந்தன. ஒரே குடும்பத்தை சேர்ந்த, குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்த சம்பவம், திருவண்ணாமலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஒரே இடத்தில் அடக்கம் இந்நிலையில், ஏழு பேரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்குப் பின், உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 7 பேரின் உடல்களும், இறுதி நிகழ்ச்சிக் காக புதன்கிழமை (டிச.4) திரு வண்ணாமலை நகரின் முக்கிய வீதியின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
அப்போது, வழிநெடுகிலும் ஏராளமானோர் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அனைவரது உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கதறி அழுத அமைச்சர் முன்னதாக, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அப்போது, குழந்தை களின் உயிரற்ற உடல்களைப் பார்த்து அமைச்சர் எ.வ. வேலு கதறி அழுதார்.