districts

img

குப்பநத்தம் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

திருவண்ணாமலை, மார்ச் 18- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் உள்ள குப்பநத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீரை சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி சனிக்கிழமை (மார்ச் 18) திறந்து வைத்தார்.  விவசாயிகளின் கோரிகையை ஏற்று 45 ஏரிகளில் குறைந்துள்ள தண்ணீரின் கொள்ள ளவை நிரப்பும் வகையில் குப்பநத்தம் அணையிலிருந்து மார்ச் 18ஆம் தேதி முதல்  மே 18ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு வினாடிக்கு 110 கன அடி விகீதம் 577.80  மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறந்துவிடப்பட்ட தண்ணீரின்  மூலம் 9432.76 ஏக்கர் பாசன விளை நிலங்கள்  பாசன வசதி பெறும் என்றும் இந்த தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெறுமாறு சட்டப் பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி விவசாயிகளை கேட்டுக்கொண்டார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.சு.தி.சரவணன், மு.பெ.கிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.