கள்ளக்குறிச்சி, அக். 2- கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் கோமுகி அணை யிலிருந்து பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு. மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார், சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் ஞாயிறன்று (அக். 2) பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் பேசு கையில், பழைய பாசனத்தில் 5.860 ஏக்கர் பரப்பளவு நிலம், புதிய பாசனத்தில் 5,000 ஏக்கர் பரப்பளவு நிலம் என மொத்தம் 10.860 ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதி பெற்று பயன டைகிறது. இந்த அணை யின் மொத்த நீர்மட்டம் 46 அடியாகும். அணையின் மொத்த கொள்ளளவு 560.96 மி.கனஅடியாகும். இந்த அனணயிலிருந்து தற்போது தண்ணீர் திறப்பதன் மூலம் பழைய பாசன பரப்பில் 7 கிராமங்களும், புதிய பாசன பரப்பில் 33 கிராமங்களும் என சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன் பெறுகிறது. கோமுகி அணையிலி ருந்து திறந்து விடப்படும் தண்ணீரை விவசாயிகள் உரிய முறையில் விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயனடைய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் அலமேலு ஆறுமுகம், திலகவதி நாகராஜன், நகர்மன்றத் தலைவர் சுப்ராயலு, பொதுப் பணித்துறை (நீர்வளத் துறை) கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர் அருண கிரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜய ராகவன், வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர் இந்திரா, உதவி செயற்பொறியாளர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.