திருவண்ணாமலை, ஜன.7- திருவண்ணாமலை அருகே விளை நிலங்களையும், கிராம மக்களின் வாழ்விடங்களையும் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளுக்கு 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு ஆதரவு தெரி வித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தின் பாரம்பரிய நீர் ஆதாரங்களான துரிஞ்சலாறு மற்றும் ஓலையாறு ஆகியவற்றை உள்ளடக்கிய, கவுத்தி, வேடி யப்பன் மலைகளுக்கு அருகில் உள்ளது பாலியப்பட்டு கிராமம். இங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாய் இருக்கும் விளை நிலங்களையும், பட்டாவுடன் வாழும் ஏழை மக்க ளின் குடியிருப்புகளையும் அழித்து, தொழிற்பூங்கா அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிராம மக்களின் வாழ்வையும், தொழிலையும் பாதுகாக்க தவறிய தோடு, மக்கள் கருத்துக்களை கேட்காமலும், சுற்றுப்புற சூழல் சட்டத்திற்கு எதிராகவும் அமைக்க வுள்ள, பெரு நிறுவனங்களுக்கான சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, பாலியப்பட்டு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவ சாயிகள ஒன்று திரண்டு, நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரி வித்து பாலியப்பட்டு கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சிப்காட் அமைக்கும் திட்டத்தையும் விவசாய நிலங்கள் மற்றும் மக்கள் வாழிடங்களை பாதிக்காத வகையில் தரிசு நிலப்பகுதிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனநாயக முறைப்படி போராடி வரும் மக்களை எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பின் சார்பாக வழக்கறிஞர் எஸ்.அபி ராமன், இல.அழகேசன். சேகர், அசோகன், பழனி உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து ஆதரவும், வாழ்த்தும் தெரிவித்தனர்.