districts

அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சுப் போட்டி

திருவண்ணாமலை, ஏப். 18- திருவண்ணாமலையில் இன்று நடைபெறும் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்பு பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயன்பெற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், அம்பேத்கரின் பிறந்தநாள் சிறப்பு பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது. திருவண்ணாமலை, தியாகி நா.அண்ணாமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாயன்று (ஏப். 19) காலை 10 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கும், மதியம் 2.30 மணிக்கு கல்லூரி மாணவர்களுக்கும் இந்த போட்டிகள் நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இதுதவிர, அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.