districts

img

திருக்கண்டலம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக்கோரிக்கை மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு

திருவள்ளூர், டிச 9- திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்த திருக்கண்டலம் ஊராட்சி யில் அரசினர் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வரு கிறது. பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராமங்களில் இருந்து   6 முதல் 10ம் வகுப்பு வரை 350 கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் ஷாமினி என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் இப்பள்ளியில் மாணவர்களை சரியான முறையில் நடத்துவ தில்லை என்றும் அவர்க ளை தரக்குறைவாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக கூறி 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திங்க ளன்று (டிச 9), காலை வகுப்புகளை புறக்கணித்து பள்ளியின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலைமை ஆசிரியரை பணி இட மாற்ற செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் காவல்துறையினர். வரு வாய்த் துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மதன் சத்யராஜ், ஒன்றிய கவுன்சிலர் ரவி ஆகியோர் மாணவர்களிடம் உரிய அதிகாரிகளிடம் இப் பிரச்சனையை எடுத்துக் கூறி நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட கல்வி அலுவலர் பொன்னேரி நவீன், ஊத்துக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சாந்தி, ஆகியோர் மாண வர்களிடம் கூறிய நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்ற னர். சுமார் 3 மணி நேரத்திற்கும் அதிக மாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் அப்பகுதி யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.