திருவள்ளூர், மே 12- தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 52 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்தி ரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொன்னேரி கோட்டத்திற்கு உட்பட்ட கும்மிடி ப்பூண்டி துணை மின் நிலைய வளாகத்தில் தோழர் எஸ்.பஞ்சரத்தினம் முதலாம் ஆண்டு நினைவு தினம் மற்றும் மே தின கல்வெட்டு திறப்பு விழா வியாழனன்று (மே-12) நடை பெற்றது. பொன்னேரி கோட்ட தலைவர் இ.முத்து தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கோட்ட செயலாளர் எம்.ெஜயக்குமார் வரவேற்றார். மின் ஊழியர் மத்திய அமைப் பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராேஜ ந்திரன் கல்வெட்டை திறந்து வைத்து சிறப்பு ரையாற்றினார். வடக்கு மண்டல செயலாளர் ஆர்.ரவிக்குமார் மேதின கொடியை ஏற்றி வைத்தார். மாநில செயலாளர் எம்.தயாளன், மாநிலத் துணைத் தலைவர் எம்.சாலட், சென்னை வடக்கு கிளை தலைவர் பி.கதி ரேசன், செயலாளர் ஜி.சத்தியமூர்த்தி, இணைச் செயலாளர் வி.உமாநந்தன், பொரு ளாளர் ஜி.மதனகோபால் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
எஸ்.ராஜேந்திரன்
நிகழ்ச்சியில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் பேசுகையில், விதிப்படி ஒரு துணை மின் நிலையத்தில் 6 ஒயர்மேன், 6 உதவியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது யாருமில்லை. அலுவலகத்திற்கு தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்படுவ தில்லை. இப்படி ஏராளமான காலிப்பணியி டங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. இதன் காரணமாக தொழிலாளர்கள் வேலை பளுவின் சிக்கி தவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மின்சார வாரியத் தில் ஏற்படுகின்ற காலிப்பணியிடங்களை கணக்கில் கொண்டு புதிய பொறுப்புகள் அனு மதிக்க வேண்டும். ஏற்கனவே மின்சார வாரி யத்தில் 15 ஆண்டுகளாக பணியாற்றிவரும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். சொல்லப் போனால் ஒப்பந்த தொழிலாளர்களால் தான் மின்சார வாரியமே இயங்கி வருகிறது. புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலகட்டத்தில் நிர்ணயித்த நாட்களை விட முன்கூட்டியே மின்சாரத்தை வழங்கியது ஒப்பந்த தொழிலாளர்களின் பணிமூலம் தான். அந்த தொழிலாளர்களின் பணி நிரந்தரம் செய்வது அரசின் கடமையாகும். கோரிக்கைகளுக்காக தொழிற்சங்கம் போராடுகிற போது மட்டும் நிதி நிலைமை சரியில்லை என்கிறார்கள். இலவச மின்சாரம் வழங்குவதாலோ மின் ஊழியர்களுக்கு சம்பளம் வாங்குவதாலோ, மின்சார வாரி யம் நட்டமாவதில்லை மாறாக நிர்வாக சீர்கேட் டால் தான் நட்டத்தில் இயங்குகிறது என ராஜேந்திரன் குற்றம் சாட்டினர். நிறைவாக ஏ.செல்வமணி நன்றி கூறினார்.