districts

img

சிபிஎம் திருவள்ளூர் மாவட்டச் செயலாளராக எஸ்.கோபால் தேர்வு

திருவள்ளூர், டிச 8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளராக எஸ்.கோபால் தேர்வு செய்யப்பட்டார்.

கட்சியின் திருவள்ளூர் மாவட்ட 24 ஆவது  மாநாடு  கும்மிடிப்பூண்டியில்  தோழர்கள் என்.சங்கரய்யாe, சீதாராம் யெச்சூரி ஆகியோர் நினைவரங்கத்தில் டிசம்பர் 7, 8  ஆகிய தேதிகளில்  நடை பெற்றது.

 மாநாட்டிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சம்பத், மாவட்டக்குழு உறுப்பினர் வி.அந்தோணி, எஸ்.பூங்கோதை ஆகி யோர் தலைமை தாங்கி னர். மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன்  துவக்கி வைத்துப் பேசினார். மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ப.சுந்தரராசன் வாழ்த்திப் பேசினார்.  மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.நம்புரா‌ஜன் நிறைவு செய்து பேசினார். வர வேற்புக்குழு செயலாளர் இ.ராஜேந்திரன் நன்றி கூறி னார்.

மாவட்டக்குழு தேர்வு

மாநாட்டில் 35 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. 

மாவட்டச் செயலாளராக எஸ்.கோபால் தேர்வு செய்யப்பட்டார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் களாக டி.பன்னீர்செல்வம், கே.ராஜேந்திரன்,  பி.துளசி நாராயணன், ஜி.சம்பத், ஏ.ஜி. கண்ணன், கே.விஜயன், ஏ.ஜி.சந்தானம், சி.பெரு மாள், இ.மோகனா, ஆர்.தமி ழரசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.