districts

img

திருவள்ளுர் மின்வழங்கல் வட்டம் உதயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

திருவள்ளூர், மார்ச் 27 - திருவள்ளூர் மாவட்டம் அமைந்து 25 ஆண்டுகள் ஆகிறது. இந்த மாவட்ட த்தில் மின் இணைப்பு பெற்ற விவ சாயிகள், தொழிற்சாலைகள், வீடு, கல்வி நிலையங்கள் மற்றும் 526 ஊராட்சிகள் இருந்தாலும் இதற்கென தனியான மின் வழங்கல் வட்டம் இல்லாமல் இருந்தது. விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில்நடைபெறும் போது, காஞ்சிபுரம்,வடசென்னை, செங்கல்பட்டு, தென்சென்னை மின்வழங்கல் வட்டங்களிலிருந்து வந்து மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொள்ளும் நிலை இருந்தது. இதனால் பல கூட்டங்களுக்கு அதிகாரிகள் வருவதில்லை. தொழிற்சாலை இணைப்பு வேண்டு மென்றால் காஞ்சிபுரத்தில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அனல் மின்நிலையங்கள் முழுவதும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. ஆனால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு என்று தனியான மின்வழங்கல் வட்டம் இல்லை. அண்மையில், உருவாக்கப் பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு கூட தனியான மின்வழங்கல் வட்டம் ஏற்படுத்தப்பட்டுடது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு என்று தனி மின்வழங்கல் வட்டம் வேண்டும் என்று மார்க்கஸிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்தன. இதை ஏற்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு என்று தனியான மின்வழங்கல் வட்டத்தை உருவாக்கிட ஜன.25 அன்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம். அதற்கான அலுவலகத்தை திருவள்ளூரில் திறக்க முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.