சென்னை, ஜூலை 14 - பெத்தேல் நகர் குடியிருப்புகளை அகற்றக் கூடாது, தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. பெத்தேல் நகர் பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த முதற்கண் வெற்றி என்றும் மார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: சோழிங்கநல்லூர் தொகுதிக் குட்பட்ட, ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சுமார் 3000 குடும்பங்களை வெளியேற்றுவதற்கு ஐ.எச்.சேகர் என்பவர் பொய்யான ஆவணங்கள் மூலமும், போலி நபர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்தப் பகுதி சதுப்பு நிலம் என 2013ல் உத்தரவு பெற்றார். இதை எதிர்த்து பொதுமக்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. 2015ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற வழக்கில், தமிழக அரசும், நில வரு வாய் ஆணையரும் அந்தப் பகுதி சதுப்பு நிலம் இல்லை. ‘அ’ பதிவேட்டில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இப்பகுதியில் ஏராளமான மக்கள் வீடு கட்டி குடியிருந்து வருவதால் நில ஒப்படைப்பு செய்து பட்டா வழங்கிட லாம் என பரிந்துரைத்தது. ஆனால், இதை மறைத்து 2013ம் ஆண்டு உத்தரவின் அடிப்படையில் நீதிமன்ற அவமதிப்பு என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக் கப்பட்டு இப்பகுதி மக்களின் வீடு களை அகற்றுவதற்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
பெத்தேல் நகர் மக்களுக்கு ஆதரவாக கடந்த 2018ம் ஆண்டி லிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வரு கிறது. குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க சட்டமன்றத்திலும் வலி யுறுத்தினர். அண்மையில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் முதலமைச்சரை சந்தித்து, பெத்தேல் நகர் வீடு களை அப்புறப்படுத்தக் கூடாது; பட்டா வழங்க வேண்டும். தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார். உயர்நீதிமன்ற உத்தரவுபடி, வீடுகளை இடிக்க நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், பெத்தேல் நகர் பாதுகாப்பு பேரவை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் வாதிட்டார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் முன்முயற்சி மற்றும் வழிகாட்டுதலின் பேரில் பெத்தேல் நகர் பேரவை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு வியாழனன்று (ஜூலை 14) நீதிபதி கள் பி.ஆர். கவாய், பத்மிடிகாந்தம் ஸ்ரீ நரசிம்மா அமர்வில் விசார ணைக்கு வந்தது. மூத்த வழக்கறி ஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதிட்டார். இதில், மாநில அரசு பதில் அளிக் கவும், அது வரை தற்போதைய நிலையே (ஸ்டேட்டஸ்கோ) தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. இது பெத்தேல் நகர் பேரவை மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கிடைத்த முதற்கண் வெற்றியாகும்.
இவ்வழக்கில் வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூசன், என்.ஜி.ஆர். பிரசாத் மற்றும் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோ ருக்கு மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டுக் களை தெரிவித்துக் கொள்கிறது. கடந்த அஇஅதிமுக அரசின் அலட்சியத்தால் பெத்தேல் நகர் மக்கள் பாதிக்கப்பட்டனர். எனவே, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி 2015ம் ஆண்டு உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு சமர்ப்பித்த பிரமான வாக்குமூலத்தின் அடிப்படையில் பட்டா வழங்க உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை முன்னுதாரணமாக கொண்டு, தமிழகத்தின் இதர பகுதிகளில் பல்லாண்டு காலமாக குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்களின் குடியி ருப்புகளை அகற்றும் நடவடிக்கை களை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.