districts

img

தீண்டாமை கொடுமைகளுக்கு தீர்வு காண்க: உள்துறை செயலாளரிடம் சிபிஎம் மனு

திருவள்ளூர்,ஜூலை 2- திருவள்ளூர் மாவட்டத் தில் நிலவும் தீண்டாமை கொடுமைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்று உள்துறை செயலர் கே. பனீந்திரரெட்டியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழனன்று (ஜூன் 30) மனு அளிக்கப்பட்டது. கூடுதல் தலைமை செய லாளர் எஸ்.கே.பிரபாகர், வருவாய்த்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.மணிவாசகம் ஆகி யோரிடமும் மனு அளிக்கப்பட்டது.  மனுவை பெற்றுக்கொண்ட உள்துறை செயலாளர்  மாவட்ட ஆட்சியர் மூலம் உரிய நடவடிக்கை எடுப்ப தாக தலைவர்களிடம் உறுதி யளித்தார். இதில் கட்சியின்  மாநிலக்குழு உறுப்பினர்கள்  பி.டில்லிபாபு, எஸ்.நம்பு ராஜன், மாவட்ட செயலாளர்  எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம்,  ஜி.சம்பத், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் டி கன்னியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்.கே.பேட்டையை அடுத்த ராஜா நகரத்தில் தலித் மக்களுக்கு வீட்டு மனையை  அளந்து கொடுக்க வேண்டும்,  கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள தோக்க மூரில் தீண்டாமை சுவரை அகற்றவேண்டும், விஷ்ணுவாக்கத்தில்  அரசு ஒதுக்கிய இடத்தில் பேருந்து நிழற்குடை அமைக்கவேண்டும், தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 6 வழிச்சாலை அமைக்க  முப்போகம் விளையக்கூடிய விவ சாய நிலங்களை கையகப்  படுத்துவதை கைவிட்டு மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப் பட்டுள்ளது.