திருவள்ளூர், டிச.7- கும்மிடிப்பூண்டி பகுதியில் சுற்றுச் சூழல் சீர்கேட்டை அரசும், மாசுக்கட்டு ப்பாட்டு வாரியமும் கண்காணித்து தடுக்க வேண்டும், அத்துமீறும் தொழிற் சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட 24 வது மாநாடு வலியுறுத்தியுள்ளது
கும்மிடிப்பூண்டியில் தோழர்கள் என்.சங்கரய்யா, சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கத்தில் சனிக்கிழமை (டிச.7) எழுச்சியுடன் தொடங்கிய மாநாட் டில் முதலில் தியாகிகள் நினைவு கொடி,கொடிமரம், நினைவு ஜோதி பெற்றுக்கொள்ளும் நிகழ்வு நடை பெற்றது. ஆர்.கே.பேட்டையிலிருந்து கொண்டு வரப்பட்ட மாநாட்டு கொடியை வட்டச் செயலாளர் ஏ.சிவப் பிரசாத் வழங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார்.
மாநாட்டு கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன் ஏற்றிவைத்தார். கும்மிடிப்பூண்டி யிலிருந்து இ.குமார், ஜி.லோகிதாஸ், எஸ்.சேகர் நினைவாக கொண்டு வரப்பட்ட கொடி மரத்தை, வட்டச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன் வழங்க, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி.சம்பத் பெற்றுக்கொண்டார்.பொன்னேரியிலிருந்து ஜி.பூர்ண சந்திரன், எம்.ஜெயராஜ், ஜி.பிரபு நினை வாக கொண்டு வரப்பட்ட ஜோதியை பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர் வழங்க, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.ஜி.சந்தானம் பெற்றுக் கொண்டார்.
சோழவரத்திலிருந்து எஸ்.குல சேகரன், எம்.முனிவேல்ராஜா நினை வாக கொண்டு வரப்பட்ட ஜோதியை, ஒன்றிய செயலாளர் அ.து.கோதண் டன் வழங்க, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.கண்ணன் பெற்றுக் கொண்டார். திருவள்ளூரிலிருந்து எஸ்.விஜயகுமார் நினைவாக கொண்டு வரப்பட்ட ஜோதியை வட்டச் செயலா ளர் எஸ்.கலையரசன் வழங்க, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பெருமாள் பெற்றுக்கொண்டார். மீஞ்சூரிலிருந்து எஸ்.சீனிவாசன், டி.பாலசுப்பிரமணி, கே.விஸ்வநாதன் நினைவாக கொண்டு வரப்பட்ட ஜோதியை ஒன்றிய செய லாளர் என்.ரமேஷ்குமார் வழங்க, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.தமிழ்அரசு பெற்றுக் கொண்டார். திருத்தணியிலிருந்து ஜி.மணிகண்டன் நினைவாக கொண்டு வரப்பட்ட ஜோதியை வட்டச் செயலாளர் வி.அந்தோணி வழங்க, மாவட்ட செயற் குழு உறுப்பினர் இ.மோகனா பெற்றுக் கொண்டார்.
மாநாட்டிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சம்பத், மாவட்ட குழு உறுப்பினர் வி.அந்தோணி, எஸ்.பூங்கோதை ஆகியோர் தலைமை தாங்கினர்.
வரவேற்பு குழு தலைவர் பி.துளசி நாராயணன் வரவேற்றார்.மாவட்ட குழு உறுப்பினர் ஜி.சூரியபிரகாஷ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டை மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் துவக்கி வைத்து பேசினார்.
புத்தக வெளியீடு விழா
மூத்த உறுப்பினர் கே.செல்வராஜ் எழுதிய, “திருவள்ளூர் மாவட்ட செங்கொடி இயக்க வரலாறு” என்ற புத்தகத்தை மாநில செயற்குழு உறுப்பி னர் ஜி.சுகுமாறன் வெளியிட மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர் செல்வம் பெற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் வேலை அறிக்கையை முன்மொழிந்தார். வரவு, செலவு அறிக்கையை மாவட்ட செயற் குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம் சமர்ப்பித்தார். மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் ப.சுந்தரராசன் மாநாட்டை வாழ்த்திப் பேசினார். இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் மாநாடு தொடர்ந்து நடைபெறுகிறது.
கோரிக்கை பேரணி
முன்னதாக கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்திலிருந்து வட்டச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டு பேரணியை மூத்த உறுப்பினர் கே.செல்வராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சிலம்பாட்ட மாணவர்களுக்கு நினைவு கேடயம்
மாநாட்டில் துவக்க நிகழ்ச்சின் போது கும்மிடிப்பூண்டி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அது பிரதிநிதிகளை அனைவரையும் ஈர்த்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாண வர்களுக்கு மாநாட்டின் சார்பாக கேட யம் வழங்கி பாராட்டினர்.