திருவள்ளூர், பிப்.21- அகில இந்திய வழக்க றிஞர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டக்குழு சார்பாக திங்களன்று (பிப் 20), “இந்திய அரசிய லமைப்பு சட்டமும் அதன் மீதான தாக்குதலும் ” என்ற தலைப்பில் கருத்தரங்கம் பொன்னேரியில் நடை பெற்றது. திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர் சார்பில் திங்க ளன்று (பிப் 20) பொன்னேரி யில் மாவட்ட செயலாளர் ஆர்.காளமேகம் தலைமை யில் நடைபெற்றது. துணைத் தலைவர் இ.எழிலரசன் வரவேற்றார். சமூக செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான ஜி.ராம கிருஷ்ணன் சிறப்புரை யாற்றினார். வழக்கறிஞர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.சிவகுமார் பொன்னேரி பார் அசோசி யேஷன் முன்னாள் செயலாளர் கோ.நந்தகோ பால், அட்வகேட் அசோசியே ஷன் தலைவர் ஏ. நெடுஞ் செழியன், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் ஏ. மாசிலாமணி, முன்னாள் செயலாளர் ஜி.இரமேஷ் கலந்துகொண்டு கருத்து ரையாற்றினார். ஏஐஎல்யு மாவட்ட குழு நிர்வாகிகள் ஸ்ரீதர்பாபு, லெனின், கலை வாணி ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் யக்ஞ பிரபா நன்றி கூறினார்.