districts

img

கூர்மாசனத்தில் கும்மிடிப்பூண்டி  மாணவி கின்னஸ்  சாதனை

திருவள்ளூர், அக். 7- கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி, கூர்மாசனம் எனும் யோகாசனத்தில் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த பிரகதீஸ்வரன் - பிரியா தம்பதியின் மகள் சஷ்டிகா (வயது 18). பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி  ஸ்ரீசங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஏழு ஆண்டுகளாக யோகா பயிற்சி பெற்று வருகிறார். திருப்பூர் பகுதியை சேர்ந்த ஆர்த்தி, (வயது25) என்ற இளம்பெண், இந்த யோகாசனத்தில், தொடர்ந்து ஒரு மணி நேரம் இரண்டு நிமிடம் இரண்டு வினாடிகள் நின்று கின்னஸ் உலக சாதனை படைத்திருந்தார். அவரது சாதனையை முறியடிக்கும் விதமாக,  மாணவி சஷ்டிகா, ஒரு மணி நேரம் ஆறு நிமிடம் ஒரு வினாடி, நின்று கின்னஸ் சாதனை படைத்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் ஏ.ஆர்.எஸ்., இரும்பு உருக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர், மாணவி சஷ்டிகா, சாதனை படைக்க நிதி உதவி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.