districts

img

இயற்கை வளங்கள் கொள்ளைப்போவதை மார்க்சிஸ்ட் கட்சி தடுத்து நிறுத்தும் திருவள்ளூர் மாவட்ட மாநாட்டில் ஜி.சுகுமாறன் பேச்சு

கும்மிப்பூண்டி, டிச.7 பாஜக ஆட்சியில் இயற்கை வளங்கள் கொள்ளை போவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடுத்துநிறுத்தும் என்று கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் கூறியுள்ளார்.

 கட்சியின் திருவள்ளூர் மாவட்ட மாநாட்டை சனிக்கிழமை  (டிச,7) துவக்கிவைத்து அவர் பேசியது வருமாறு இந்தியாவைப் பொறுத்தவரை நமக்கு இருக்கும் பிரச்சனை கடந்த 10 ஆண்டு காலமாக பாஜக ஆட்சி நடத்தியதுதான். கடும் விலையேற்றம், மதவெறி தாக்குதல்கள் என பல்வேறு கொடுமைகளை மக்கள் அனுபவித்து வந்தனர்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் 400 மேற்பட்ட இடங்களை கைப்பற்றுவோம் என பாஜக சொன்னது. சிபிஎம் அகில இந்திய தலைமை பாஜக மீண்டும் தனிப்பெரும் மெஜாரிட்டி வருவதை அனுமதிக்க கூடாது என்று சொல்லி மதச்சார்பற்ற கட்சிகளை ஓரணியில் திரட்டியது. மோடி அரசின் விலைவாசி உயர்வு, வேலையின்மை, மதவெறி அரசியலை எதிர்த்து பல்வேறு இயக்கங்களை நடத்தினோம்.அதன்பயனாக பாஜக 240 இடங்களுக்குள் சுருக்கப்பட்டது. ஒரு வேலை பாஜக மீண்டும் 400 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால், இந்த மாநாடு நடத்தி இருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

பாஜகவின் பாசிச அரசு, தொழிலாளர் சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றுகிறது. தொழிலாளிக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இஸ்லாமிய வீடுகளில் புல்டோசர் வைத்து இடித்து தள்ளுகிறார்கள். இப்படி சிறுபான்மை மக்களை குறிவைத்த இதற்கு எதிராக வலுவாக மேலும் நாம் போராட வேண்டும். தமிழகத்தில் உள்ள மாநில அரசு துறைகள் மருத்துவம், ஆசிரியர்கள், தொழிற்சாலைகளில் என அனைத்து துறைகளிலும் நிரந்தரமற்ற பணியில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள், துறைமுகங்கள், கடற்கரை என எல்லா வளங்களும் உள்ளன. அது யார் கையில் உள்ளது என்பது தான் பிரச்சனை. இந்த வளங்களை முதலாளிகள் கொள்ளையடித்துக்கொண்டு செல்வதை அரசுகள் வேடிக்கை பார்க்கிறது. இதனை தொழிலாளி வர்க்கம் வேடிக்கை பார்க்காது தொடர்ந்து வலுவாக போராட்டங்களை முன்னெடுப்போம். இவ்வாறு சுகுமாறன் பேசினார்.