திருவள்ளூர், மார்ச் 19- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மார்ச் 18 அன்று நடைபெற்றது. இதில் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரையிலான தேசிய நெடுஞ் சாலை திட்டத்திற்கு நிலம் தரும் விவசாயிகளுக்கு 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் இழப்பீடு சந்தை மதிப்பீட்டில் வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து அரசிற்கு தெரியப்படுத் தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த பதிலைஏற்க மறுத்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். உரிய இழப்பீடு வழங்கா மல் நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என முழக்கமிட்டவாறு கூட்டத்தை விட்டு விவசாயி கள் வெளியேறினர்.இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஜி.சம்பத், மாவட்ட செயலாளர் பி.துளசி நாரா யணன், துணை நிர்வாகி சிநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.