திருவள்ளூர், ஏப்.7 - 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் ஏ.ஜி.சந்தானம் வலியுறுத்தி உள்ளார். பொன்னேரி நகராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு அரசா ணைப்படி ஊதியம் வழங்க வேண்டும், இவர்களுக்கு பணிக்கொடை, ஓய்வுதியம், வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு கொரோனா சிறப்பு தொகை யாக 15ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், மூன்று ஆண்டு கள் பணி முடித்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு பள்ளிகளில் பணி புரியும் தூய்மை பணி யாளர்களுக்கு 24 மாத ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும், தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி கள் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி வியாழனன்று (ஏப்.7) பொன்னேரியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் இந்த போராட்டத்தை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் ஏ.ஜி.சந்தானம், “கடைநிலை ஊழியர்களின் தேவைகளை உடனடியாக மாநில அரசு நிறைவேற்ற வேண்டும், கொரோனா சிறப்பு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலை வர் பி.கதிர்வேலு தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜயன், மாவட்ட குழு உறுப்பினர் கள் எஸ்.எம்.அனீப், கே.நாக ராஜ், குமரவேல், குணசேக ரன் உள்ளிட்டோர் பேசினர்.