திருவள்ளூர், ஆக. 26 - தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பின் (சிஐடியு), 6-ஆவது மாநில மாநாடு திங்களன்று (ஆக 26), திருவள்ளூர் மாவட்டம், பழவேற் காட்டில், தோழர் கே. வைத்தியநாதன் நினைவரங்கத்தில் நடைபெற்றது.
மாநாட்டிற்குத் தலைமை வகித்து, மாநிலத் தலைவர் ஜி. செலஸ்டின் பிலிப் நினைவு சங்க கொடியை ஏற்றி வைத்தார். வி. கலாவதி நினைவு சிஐடியு கொடியை மாநில செயல் தலைவர் எம். கருணா மூர்த்தி ஏற்றி வைத்தார். வரவேற்புக் குழு செயலாளர் பழவேற்காடு டி. நித்தி யானந்தம் வரவேற்றார். மாநிலச் செய லாளர் பி.சகாய பாபு அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.
மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் புல்லுவிளை ஸ்டான்லி துவக்க உரையாற்றினார். மாநில பொதுச் செய லாளர் எஸ். அந்தோணி வேலை அறிக்கையையும், மாநில பொருளாளர் எஸ். ஜெயசங்கரன் வரவு - செலவு கணக்கையும் சமர்ப்பித்தனர்.
சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் கே. விஜயன், மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாநிலப் துணைப் பொதுச்செயலாளர் வி. குமார் நிறைவு ரையாற்றினார்.
வரவேற்புக்குழுத் தலைவர் ஜி. விநாயகமூர்த்தி நன்றி கூறினார். முன்ன தாக பழவேற்காடு மீன் விற்பனை நிலை யம் அருகில் இருந்து மாநாட்டுத் திடல் வரை பேரணி நடைபெற்றது.
மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு க்கு 41 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. கவுரவத் தலைவராக ஜி. செலஸ்டின், மாநிலத் தலைவராக எம். கருணாமூர்த்தி, மாநில பொதுச் செய லாளராக எஸ். அந்தோணி, பொருளாள ராக எஸ். ஜெயசங்கரன், மாநில துணைத் தலைவர்களாக டிக்காந்தூஸ், ராமு, ஜி. விநாயகமூர்த்தி, பாண்டியன், ஏழு மலை, பழனிச்சாமி, வைத்தியலிங்கம், செல்வானந்தம், கணேசன், துணைச் செயலாளர்களாக லோகநாதன், ஜீவா னந்தம், பரமசிவம், அலெக்சாண்டர், சதீஷ், நித்தியானந்தம், சகாயபாபு, மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்
சென்னையில் பாரம்பரியமாக கடலில் மீன் பிடித்து வருபவர்களையும், மீன் விற்பனை மற்றும் இதர தொழில் செய்து வருபவர்களை, கடற்கரையை நவீனப்படுத்துகிறோம், அழகுபடுத்து கிறோம் என்ற பெயரில் அப்புறப்படுத்து வதைக் கைவிட வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டம், தேங் காய்ப்பட்டினம் துறைமுக பணி நிறை வடையாமல் உள்ளதை சிறப்பு கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும். மீனவர்களை பழங்குடியின பட்டியலில் இணைக்க வேண்டும், மீனவ கூட்டுறவு சங்கங்களில் முறையாக தேர்தல் நடத்த வேண்டும், பழவேற்காடு ஏரியை தூர்வார வேண்டும், மீன் இன பெருக்கத்திற்காக மீன்பிடி தடை செய்யப்பட்ட 61 நாட்களுக்கு நிவாரண மாக ரூ. 18 ஆயிரத்து 300 வழங்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களை தனித்தனி ஊராட்சிகளாக தமிழ்நாடு அரசு மாற்ற வேண்டும், குடிமனை பட்டாக்கள் வழங்க வேண்டும், 60 வயதை கடந்தவர்களுக்கு மாதம் ரூ. 3000 ஓய்வூதி யம் வழங்க வேண்டும். மீனவர் களுக்கு தனியாக வங்கிகளை உரு வாக்க ஒன்றிய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும், கடலூர் துறைமுகத்தை ஆழப்படுத்தி பயன் பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.