districts

img

வழக்கறிஞர் சத்யா குடும்ப நிதி

திருவள்ளூர், செப் 16- மறைந்த மனப்பாக்கம் வழக்கறிஞர் சத்யா குடும்பத்திற்கு சேமநல நிதியாக ரூ.7 லட்சத்திற்கான காசோலையை நீதிபதி ஜி.செந்தமிழ்செல்வன் வழங்கினார். ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த மனப்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.சத்யா என்பவர் அண்மை யில் காலமானார். அவரின் குடும்பத்திற்கு சேமநல நிதியாக சத்யாவின் மனைவி உமா மகேஸ்வரி யிடம்  ரூ.7 லட்சத்திற்கான காசோலையை  நீதிபதி செந்தமிழ்செல்வன் வழங்கினார். வெள்ளி யன்று (செப் 16) நடை பெற்ற நிகழ்ச்சிக்கு வழக்க றிஞர்கள் சங்க தலைவர் ஏ.சீனிவாசன் தலைமை தாங்கினார்.  நிகழ்ச்சியில் சிறப்பு நீதி பதி பாரதி,  சங்கத்தின் காப்பாளர் பி.என்.தீன தயாளன், அரசு வழக்கறி ஞர் ஜெ.வெஸ்லி, செய லாளர் டி.மகேந்திரன், பொரு ளாளர் த.கன்னியப்பன், துணைத் தலைவர் சாமு வேல், துணை செயலாளர் பிரகாஷ்,  ஆடிட்டர் சதீஷ், நூலகர் சாந்தகுமார் மூத்த வழக்கறிஞர்கள் கே.குண சேகரன், பி.எம்.சாமி, எம்.பார்த்திபன், ஆர்.வெற்றி தமிழன், ஏ.வேல்முருகன், ஜெ..முனுசாமி, ஆர்.பால சுப்பிரமணியகுமார், ஜி.நரசிம்மன், கே.சுதாகர் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.