திருவள்ளூர், டிச. 8- திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழி லாளியான கவிதா (40).
இவர் தமது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக திருவள்ளூரில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற தடம் எண் 172 அரசு பேருந்தில் கவிதா பயணித்தார். பெரியபாளையம் அடுத்த வடமதுரை அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்தி ருந்த கவிதா முன் இருக்கைக்குசெல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது ஒரு வளைவில் பேருந்து திரும்பிய போது எதிர்பாராத விதமாக கவிதா நிலை தடுமாறி பேருந்தின் பின்புற படிக்கட்டின் வழியாக தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கவிதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் காவல் துறையினர் உயிரிழந்த கவிதாவின் சடலத்தை கைப்பற்றி கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து பெரியபாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.